Saturday, February 13, 2010

பாரதியாரின் நாய் கதை.


இந்த இந்திய மண் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைய பல மைந்த்ர்கள்.
மொழி வாரியாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்டனர் . தமிழ் மண்ணில் இருந்து
பல வீரர்களும், கவிஞர்களும் களத்தில் திறத்தை காட்ட முற்பட்டனர்.
தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர் திரு பாரதியார் அவர்கள்.
இவர் எழுதிய பல இலக்கியங்கள். சுதந்திரப்போராட்ட சுடரை தமிழகத்தில் கொழுந்து விட்டு புனல் வாதம் செய்ய வைத்தது. அவற்றில் ஒன்றுதான் பாரதியாரின் "நாய் கதை".

அரசர்கள் தமிழகத்தை காத்து கொண்டிருந்த நேரம் அது. ஒரு நாட்டை ஆண்டுகொண்டிருந்த அரசன் ஒரு சிறிய காட்டில்,
தன்னுடைய சேனைப்படைகளுடன் விலங்கினை வேட்டையாட சென்றுகொண்டிருக்கையில், களைப்பை போக்க படைகளை நடுவழியே நிறுத்தினான்.
அவன் வேட்டைக்கு செல்லும்போது தான் வளர்க்கும் நாயினை அழைத்துச்செல்வது வழக்கம். அன்றும் அவ்வாறே தன் நாயினை அழைத்துச் சென்றான். அரசன் மறைவில் ஒதுங்கவே நாய் மரத்தின் மறைவில் தன்னை கண்டுகொண்டிருந்த மற்றுமொரு நாயினை கவனித்தது. காட்டு நாய் மிகுந்த வாடளுடன் காணப்பட்டது. அது மிகவும் இளைத்து குரிகியிருன்தது. வாடியிருந்த
காட்டு நாயினை கண்ட அரசனுடைய நாய். அதுவும் தன் இனம் எனக் கண்டறிந்தது.
சற்றே இடம் நகர்ந்து காட்டு நாயினை அடைந்தது.
அரசனுடைய நாய்: நீ நாயினமா?
காட்டு நாய்: ஆம் நான் நாய் வகையை சேர்ந்தவனே.
அ .நாய்: நீ ஏன் இவ்வாறு மெலிந்திருக்கிறாய்?
கா.நாய்: எனக்கு இவுலகில் உன்ன ஏதும் கிடைப்பதில்லை.
அ .நாய்: எனக்கு தினமும் நிறைய உண்ணக் கிடைக்கிறது.
கா.நாய்: அப்படியா?
அ .நாய்:ஆம். எனக்கு காலை முதல் இரவு வரை தின்பண்டங்கள் நிறைய கிடைக்கும். அது மட்டுமில்லாது , மாமிசன்களே நான் உன்ன தரப்படும்.
பட்டு மெத்தையிலே நான் துயில்வேன். நான் நினைத்ததை செய்ய எனக்கு உரிமை உண்டு.
கா.நாய்:என்ன அதிசயம்! ஆனால் இந்நாட்டில் நான் மக்களால் கல்லால் அடித்து துன்புருத்தப்பதுகிறேன்.

அ.நாய்:அப்படிஎன்றால் நீ என்னுடன் வந்ந்து விடு. எனக்கு கிடைக்கும்
அனைத்து சலுகைகளையும் கிடைக்க வழி செய்கிறேன்.
கா.நாய்:நான் உனக்கு மிகும் கடன் பட்டவனாக இருப்பேன். மிகவும் நன்றி.
அ.நாய்:பரவாயில்லை.
கா.நாய்:ஆம் நான் கேட்க மறந்துவிட்டேன்! இதேன்ன கழுத்தில் தங்கத்திலான கட்ச்சை போன்று உள்ளதே.
அ.நாய்:இது சங்கிலி எனப்படும். இது எப்பொழுதும் என் கழுத்தில்தான் இருக்கும்
அனால் இதன் கட்டுப்பாடு அரசரின் கையில்தான் இருக்கும்.
கா.நாய்:??????????????

பாரதியார்:
பட்டினியாய் கிடப்பினும்!
பாரத நாட்டில் !
அந்நியரின் வாசம் இல்லா மண்ணை சுவாசித்து!
சகோதர சகோதரிகளுடன்! சுதந்திர வாழ்வு!
புசித்த வயிற்றின் இன்பத்தை விட பெரிதாம்!

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

No comments:

Post a Comment